Breaking News: நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்
நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு 5 ஆண்டுகள் சினிமாவில் தடை தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது தமிழ் சினிமாவில் பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் புகாருக்கு உள்ளாவோர் மீதான புகார் நிரூபணம் ஆனால் சினிமாவில் பணியாற்ற 5 ஆண்டு தடை விதிக்க வேண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இதுதொடர்பாக பரிந்துரைக்க நடிகர் சங்க கூட்டம் தீர்மானம் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் பாலியல் சீண்டல் குறித்து தொலைபேசி, இ மெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றம் நடிகைகள் ரோகினி, சுகாஷினி, குஷ்பூ, கோவை சரளா, லலிதா குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்பு நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், முருகன், கார்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்பு