தர்மம் வெல்ல வேண்டும்; ஆக்ரமிப்புகள் அழிக்கப்படும் nagarjuna akkineni| revanth reddy| hyderabad| hyd
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஏரிகள், அரசு நில ஆக்ரமிப்புகளை அகற்ற, ஹைட்ரா (HYDRAA) என்ற ஐதராபாத் பேரிடர் மீட்பு இயற்கை அரண்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை என்ற அமைப்பு உள்ளது. ஐதராபாத் மாநகராட்சியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது இதன் நோக்கம். மாதாப்பூரில் திம்மடி குண்டா ஏரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டங்களை ஹைட்ரா அமைப்பு இடித்தது. அதில், நடிகர் நாகார்ஜுனாவின் N கன்வென்ஷன் திருமண மண்டபம் மூன்றரை ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்ரமித்ததாக இடிக்கப்பட்டது. நாகார்ஜுனா ஐகோர்ட்டில் முறையிட்டதையடுத்து இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஏரி நிலத்தை ஒரு இன்ச் கூட ஆக்ரமிக்கவில்லை; அது பட்டா நிலம் என்று நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார். கட்டடத்தை இடிப்பதற்கு முன் ஒரு நோட்டீஸ் கூட தரவில்லை. தவறான தகவல் அடிப்படையில் இடித்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அது ஆக்ரமிப்பு என கோர்ட் சொல்லியிருந்தால் நானே இடித்து இருப்பேன் என நாகார்ஜுனா கூறினார்.