உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புல்டோசர் பயன்படுத்தவும் அரசு தயங்காது: பட்னவிஸ் எச்சரிக்கை! Nagpur riot | Aurangazeb Incident |

புல்டோசர் பயன்படுத்தவும் அரசு தயங்காது: பட்னவிஸ் எச்சரிக்கை! Nagpur riot | Aurangazeb Incident |

மகாராஷ்டிரா சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி, முகலாய மன்னர் அவுரங்க சீப்பை புகழ்ந்து பேசியதால் சர்ச்சை வெடித்தது. இந்துக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி செய்த முகலாய மன்னர் அவுரங்க சீப்பின் கல்லறை மகாராஷ்டிராவில் இருக்கக் கூடாது என, இந்துத்வா அமைப்புகள் குரல் எழுப்பின. மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் அமைந்துள்ள அவுரங்க சீப் நினைவிடத்தை அரசு உடனே அகற்ற வேண்டும் என, 17ம் தேதி பஜ்ரங்கதள் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது அவுரங்க சீப் மற்றும் அவரது நினைவிடத்தின் மாதிரி உருவ பொம்மைகள் கொளுத்தப்பட்டன. குரான் வாசகங்கள் எழுதிய துணி எரிக்கப்பட்டதாக வதந்தி கிளம்பியதால் இரு தரப்பினர் இடையே கலவரம் வெடித்தது. கடைகள் உடைக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. டூ வீலர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரத்தை ஒடுக்க வந்த போலீசார் கல்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகினர். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த போலீசார், கலவரத்துக்கு மூல காரணமாக இருந்ததாக சிறுபான்மையினர் ஜனநாயக கட்சியை சேர்ந்த பாஹிம் கான் என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தாமாக முன் வந்து சரண் அடைந்தோர், போலீசாரால் அடையாளம் காணப்பட்டோர் என கலவரத்தில் தொடர்புடைய 104 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுபான்மையினர் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் ஹாமித் இன்ஜினியர் வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நாக்பூர் கலவர விசாரணை நிலவரம் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் விளக்கம் அளித்துள்ளார். நாக்பூர் கலவரம் குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்பட்டது.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !