/ தினமலர் டிவி
/ பொது
/ தரை தட்டிய பஸ் படிக்கட்டு: பதறிய பயணிகள் | Namakkal bus incident | Government bus step detachment
தரை தட்டிய பஸ் படிக்கட்டு: பதறிய பயணிகள் | Namakkal bus incident | Government bus step detachment
நாமக்கல், குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை டவுன் பஸ் இயக்கப்படுகிறது. காலை 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆவத்திபாளையம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பயங்கர சத்தம் கேட்டது. பயணிகள் பதறியடித்து பார்த்தபோது பின்பிக்க படி தரையில் உரசி நின்றது. ஏற்கனவே துருபிடித்த நிலையில் இருந்த அது, வேகத்தடையில் ஏற்பட்ட அதிர்வால் துண்டாகி விழுந்தது தெரிய வந்தது. சேதமடைந்த படியை கயிறு மூலம் கட்டிய போக்குவரத்து ஊழியர்கள், பஸ்சை பழுதுபார்க்க டிப்போக்கு கொண்டு சென்றனர். காலை நேரம் நடந்த இந்த சம்பவத்தால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
அக் 08, 2025