உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாமக்கல் அரசு பள்ளியில் சம்பவம்: காரணம் என்ன? namakkal government school students

நாமக்கல் அரசு பள்ளியில் சம்பவம்: காரணம் என்ன? namakkal government school students

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது 16 வயது மகன் ஆகாஷ், வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை வகுப்பறையில் இருந்த ஆகாசுக்கும், செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சக மாணவன், கடுமையாக தாக்கியதில் ஆகாஷ் மயங்கி விழுந்தார். பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷை மீட்டு, எருமப்பட்டி அரசு ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆகாஷின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தன் செருப்பை மறைத்து வைத்ததை ஆகாஷ் தட்டிக்கேட்டதால், அந்த மாணவன் ஆகாஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி