உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதையில்லா பாரதம் பிரகாசம்: குஜராத், டில்லியில் சம்பவம்

போதையில்லா பாரதம் பிரகாசம்: குஜராத், டில்லியில் சம்பவம்

இந்தியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை மத்திய போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். போதை பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது என அமித் ஷா கூறினார். பதிவு செய்யப்படாத ஒரு கப்பல் போதைப்பொருட்களுடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக, இந்திய கடற்படைக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில், தேசிய போதைபொருள் தடுப்புப்பிரிவு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு போலீஸ் படை மூன்றும் இணைந்து தனிப்படையை உருவாக்கின. குஜராத்தில் உள்ள போர்பந்தர் கடற்பகுதியில் கடற்படை ரோந்து கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. ஷிப் டிராக்கிங் இன்டிகேட்டர் சிஸ்டம் பொருத்தப்படாத அந்த கப்பலை கடற்படையின் ரோந்து கப்பல்கள் இன்று சுற்றி வளைத்தன.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ