நரிக்குறவ பெண்கள் கதறல்: உடனடியாக தீர்வு கண்ட கலெக்டர் nari kurava women
தர்மபுரி மாவட்டம் பச்சனாம்பட்டி பகுதியில் 50க்கு மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசிக்கின்றன. நரிக்குறவர்கள் அருணாச்சலம், சுரேஷ் ஆகியோர் கவுதாரியை பிடிக்க விவசாய நிலத்தில் வலை விரித்திருந்தனர். ஆனால், வலையில் கீரிப்பிள்ளை சிக்கியுள்ளது. கீரிப்பிள்ளையை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை உடனே அவர்கள் விட்டு விட்டனர். இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு போனது. அருணாச்சலம், சுரேஷ் இருவரையும் வனத்துறையினர் விசாரணைக்காக நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். 2 நாள் ஆகியும் இருவரது நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை சந்திக்கவும் வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் இருவரது குடும்பத்தினர் மன உளைச்சல் அடைந்தனர். இந்நிலையில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமுக்காக அரூர் வந்த கலெக்டர் சதீ ைஷ நரிக்குறவ பெண்கள் முற்றுகையிட்டனர். கைதான சுரேஷ் மற்றும் அருணாச்சலத்தின் குடும்பத்தினர் கலெக்டர் சதீஷ் காலில் விழுந்து கதறி அழுதனர். வனத்துறையினர் பிடித்துச் செனற இருவரையும் விடுவிக்காவிட்டால் தீக்குளிப்போம் என்றனர்.