உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 27 ஆண்டு விண்வெளி ஆய்வு ஓய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ் Nasa astronaut sunita Williams retires

27 ஆண்டு விண்வெளி ஆய்வு ஓய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ் Nasa astronaut sunita Williams retires

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 27 ஆண்டு விண்வெளி சேவைக்கு பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது இந்த பணி ஓய்வு கடந்த ஆண்டு டிசம்பர் 27 முதல் அமலுக்கு வருகிறது என நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தற்போது, சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விண்வெளி பயண வரலாற்றில் முன்னோடியாக திகழ்ந்த சுனிதா வில்லியம்ஸ், 3 முறை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளார். அதிக நேரம் விண்வெளியில் செலவிட்ட 2வது நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார். அவர் 608 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார். அவர் விண்வெளியில் 9 முறை நடந்துள்ளார். (spacewalks) விண்வெளியில் அவர் நடந்த மொத்த நேரம் 62 மணி நேரம் 6 நிமிடம் என கணக்கிடப்பட்டுள்ளது. விண்வெளியில் முதல் முறையாக மாரத்தான் ஓடிய பெருமையும் அவருக்கு உண்டு. சுனிதா வில்லியம்சுக்கு நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் Jared Isaacman புகழாரம் சூட்டியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் மனித விண்வெளி பயணத்தில் ஒரு நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் International Space Station(ISS) அவரது தலைமை எதிர்கால ஆய்வுகளை வடிவமைத்தது. குறைந்த புவி சுற்று பாதைக்கான வணிக பயணங்களுக்கு வழி வகுத்தது. அவரது பணி நாசாவின் சந்திரன் மற்றும் செவ்வாய் கோள்களை நோக்கிய பயணங்களுக்கு அடித்தளமிட்டது. அவரது சாதனைகள் பல தலைமுறைகளை ஊக்குவிக்கும் என ஜாரெட் ஐசக்மேன் Jared Isaacman கூறினார்.. விண்வெளி எனக்கு மிகவும் பிடித்த இடம் என என்னைத் தெரிந்த பலருக்கும் நன்றாக தெரியும். 27 ஆண்டுகள் அற்புதமான பயணம் முடிந்திருக்கிறது. என் சக ஊழியர்களின் அன்பு மற்றும் ஆதரவால் இது சாத்தியமானது என்று சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். #SunitaWilliams#NASA#Astronaut#SunitaWilliamsRetires#Retirement#NASAretirement

ஜன 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை