உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புயலை கிளப்பும் நடராஜர் கோயிலின் 2000 ஏக்கர் நில விற்பனை புகார் | Natarajar temple | Land sale

புயலை கிளப்பும் நடராஜர் கோயிலின் 2000 ஏக்கர் நில விற்பனை புகார் | Natarajar temple | Land sale

இப்படியா பழி சுமத்துவது நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு ஈடு செய்ய முடியாத களங்கம்! சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில், 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இரண்டரை ஆண்டுகளாக பொது தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமில்லாமல் பொய் தகவல் பரப்பப்பட்டு வருவதாக சிதம்பரம் நடராஜர் கோயில் கமிட்டி செயலர் வெங்கடேச தீட்சிதர், கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியுள்ளனர். 2014 முதல் 2024 வரை, கோயிலின் வரவு செலவு கணக்கு விபரங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை