70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! 70th National film award | Ponniyin Selvan part 1
4 விருதுகளை தட்டி தூக்கியது பொன்னியின் செல்வன் ! ARRக்கு மீண்டும் கவுரவம் 70வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மலையாள மொழியில் வெளியான ஆட்டம் திரைப்படம் தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆனந்த் ஏகார்ஷி எழுதி, இயக்கியுள்ளார். சிறந்த நடிகராக கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கன்னடம், தமிழ், ஹிந்தி என பன்மொழிகளில் வெளியான காந்தாரா படத்தில் நாயகனாக மிக சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரே இந்த படத்தை டைரக்டும் செய்திருந்தார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கன்னடத்தில் வெளியான காந்தாரா அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மித்ரன் ஜவகர் இயக்கிய திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன், சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளார்.