/ தினமலர் டிவி
/ பொது
/ நேஷனல் ஹெரால்டு வழக்கு குற்றப்பத்திரிகையில் இருப்பது என்ன? National herald case | Sonia | Rahul | Ch
நேஷனல் ஹெரால்டு வழக்கு குற்றப்பத்திரிகையில் இருப்பது என்ன? National herald case | Sonia | Rahul | Ch
1937ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து Asociated Journals Limited (AJL) என்ற நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அப்போது அதன் முதலீடு 5 லட்சம் ரூபாய். இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் நாளிதழ்களை 2008 வரை வெளியிட்டது. அதன்பின் இழப்பை சந்தித்து முடங்கியது. இருப்பினும் ஏஜெஎல் நிறுவனத்துக்கு டில்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னாவில் 5000 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருந்தன.
ஏப் 16, 2025