வழக்குகளை விரைந்து முடிக்க உதவும் டெக்னாலஜி | National law Tribunal | Chennai | VC facility
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வீடியோ கான்பிரன்ஸ் வசதி துவக்கம் நாடு முழுவதும் அனைத்து தீர்ப்பாயங்களிலும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவும் வழக்காடும் வசதி ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஏற்படுத்தப்பட்ட வீடியோ கான்பிரன்ஸ் வசதியை, தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ராமலிங்கம் சுதாகர் துவக்கிவைத்தார். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ஜே.கே.திரிபாதி, தொழில்நுட்ப உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் ராமசாமி, வெங்கட்ராமன் சுப்பிரமணியன், தீர்ப்பாயத்தின் துணை பதிவாளர் நடராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வழக்குகளை விரைவாக முடிக்கவும், நிறுவனங்கள், வக்கீல்களின் பணிகளை எளிதாக்கவும் இந்த வசதி உதவும் என நீதிபதி ராமலிங்கம் சுதாகர் தெரிவித்தார்.