திருமண ஆவணப்பட விவகாரம் கோர்ட்டுக்கு போனது actoress nayanthara| actor danush| vignesh shivan|
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து 2022ல் திருமணம் செய்தனர். இவர்களது திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி ஓடிடி தளத்தில் வெளியிட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றது. இதன் டீசர் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஆகியோரின் வீடியோ கிளிப்கள் டீசரில் இடம் பெற்று இருந்தன. அந்த படத்தை நடிகர் தனுஷின் வோண்டர் பார் நிறுவனம் தயாரித்து இருந்தது. தங்களிடம் அனுமதி பெறாமல் அந்த வீடியோக்களை பயன்படுத்தியதாகவும், அதற்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும் தனுஷின் நிறுவனம், நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இச்சூழலில், கடந்த 18 ம் தேதி நயன்தாரா பிறந்தநாளில் அவரது திருமண ஆவணப்படம் வெளியானது. அதில் நானும் ரவுடிதான் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அந்த படத்தில்தான் நயன்தாரா-விக்னேஷ்சிவன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், சென்டிமென்ட் கருதி அந்த காட்சிகளை சேர்த்து இருப்பதாக தெரிகிறது. அனுமதியை மீறி அந்த காட்சிகளை பயன்படுத்தியதால், 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டு உள்ளது