ராமநாதபுரம் டு இலங்கைக்கு கடத்த ஸ்கெட்ச் | NCB | Drug Seized | Chennai NCB Case | Methampetamaine
சென்னையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இப்பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை டீம் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக கடந்த புதனன்று கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில் 5.970 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் வகை போதை பொருள் இருந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர். அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த பைசுல் ரஹ்மான் என்பது தெரிந்தது. தொடர் விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் படி செங்குன்றம் பகுதியில் உள்ள குடோனில் போதை பொருள் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். சனியன்று அங்கு நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 954 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 7 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மொத்தம் 6.924 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.