அண்ணா பல்கலை சம்பவம் சென்னை வந்த NCW உறுப்பினர்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பற்றி தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க உள்ளது. இதற்காக, மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கொல்கத்தாவில் இருந்து மம்தா குமாரி , புனேவில் இருந்து பிரவின் தீட்சித் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் நாளை இவர்கள் விசாரணை நடத்த உள்ளனர். தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு சீமான் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
டிச 30, 2024