மாணவி வழக்கு விசாரணை அறிக்கையை பிரதமரிடம் சமர்பிப்போம் | NCW investigation | Anna university studen
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இதற்காக ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் அடங்கிய விசாரணைக்குழு 29-ம் தேதி இரவு சென்னை வந்தது. நேற்று காலை அண்ணா பல்கலைக்கு சென்ற அவர்கள், அங்கு விசாரணையை தொடங்கினர். பல்கலைக்கழக நிர்வாகிகள், ஊழியர்கள், காவலாளிகளிடம் விசாரணை நடத்தினர். வன்கொடுமைக்கு ஆளான மாணவி, உடன் இருந்த மாணவர், மாணவியின் பெற்றோரிடம் விவரமாக கேட்டறிந்தனர். இந்த விசாரணை மாலை 5 மணி வரை நடந்தது. பின்னர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள், கவர்னர் ரவியை சந்தித்து வழக்கு குறித்து ஆலோசனை நடத்தினர். பிறகு, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரையும் சந்தித்தனர். 2 நாள் விசாரணையை முடித்துக்கொண்டு விசாரணைக்குழுவினர் இன்று டில்லி புறப்பட்டனர். அப்போது பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஏற்கனவே குற்ற வழக்கில் இருக்கும் நபரை எப்படி அரசு இவ்வளவு இயல்பாக நடமாட அனுமதித்தது என கேட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரின் குடும்பத்தினரையும் பார்த்து விசாரித்தோம். கவர்னரை சந்தித்தும் பேசியிருக்கிறோம். டில்லியில் இருந்து வந்த 4 பேர் குழு சம்பவம் நடந்த இடத்தை பார்த்துள்ளார்கள். விசாரணை நடத்தி தயார் செய்த அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்க உள்ளோம். அந்த குற்றவாளி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் அவனை எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள்.