சிந்தூர், மகாதேவ் ஆபரேஷன் சக்சஸ்: மோடிக்கு குவிந்த பாராட்டு pm modi| operation sindoor| operation m
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டணி கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகிய ராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து கைகுலுக்கினார். அப்போது எம்பிக்கள் ஹரஹர மகா தேவ், பாரத் மாதா கீ ஜெய் என முழக்கம் எழுப்பியும், கைகள் தட்டியும் மோடியை பாராட்டினர். இக்கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், அந்த தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இந்திய ராணுவத்தினர் துணிச்சல், வீரத்தை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.