துணை ஜனாதிபதி வேட்பாளரை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் மோடி NDA Vice President Candidate
ேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். டில்லியில் இன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பார்லிமென்ட் கட்சிக் கூட்டத்தில், ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சி.பி.ஆருக்கு பூங்காெத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். ப்ரத் இந்த நிகழ்ச்சியில், மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் சி.பி.ஆர் பற்றி பிரதமர் மோடி அறிமுக உரை நிகழ்த்தினார். என்டிஏ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள சிபிஆர்ஐ அனைவரும் ஆதரிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தினார். கட்சி பேதம் கடந்து சி.பி.ஆர்ஐ அனைத்து எம்பிக்களும் ஆதரித்து துணை ஜனாதிபதியை போட்டியின்றி தேர்வு செய்ய உதவ வேண்டும் எனவும் மோடி கூறினார். ராஜ்நாத் சிங்கும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார். சிபிஆர் அறிமுகக்கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், பொது வாழ்வில் அப்பழுக்கற்ற நபர் சிபிஆர். அவரைப்போன்ற சிறந்த நிர்வாகி, நல்ல மனிதரை துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியதில் மகிழ்ச்சி என்றார். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வானால், நாட்டிற்காக உன்னத சேவை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரது அனுபவம் ராஜ்யசாபாவை சிறப்பாக வழிநடத்த உதவும் எனவும் கிரண் ரிஜிஜு கூறினார்.