உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நந்தன் நிலேகனி தலைமையில் புதிய குழு: வீடியோ வெளியிட்ட பிரதமர்

நந்தன் நிலேகனி தலைமையில் புதிய குழு: வீடியோ வெளியிட்ட பிரதமர்

நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொது தேர்வு முறைகேடுகளை தடுக்கும் சட்டத்திருத்த மசோதா நாளை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: மாணவர்களின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கெடுத்தவர்கள், சிறையில் வாடுகின்றனர். ஏற்கனவே விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான விதிகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை பார்லிமென்டில் நிறைவேற்ற உள்ளோம். இருப்பினும், நமது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். மேலும் அது தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். #PM_Modi #Video #NEET #paperleak #Task_force #Highpowered_panel #Expert_panel #Exam _reforms #Transparency #Studenyts_future #Narendra_modi #Neet_bill #Parliament #Nandan_nilekani #Reforms_panel #BJP #Nationalnews #currentaffairs #Breakingnews

ஜூலை 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை