கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது: கோர்ட் NEET PG | SC verdict | NEET Case | NEET Postponement
நீட் முதுகலை தேர்வை ஒத்திவைக்க முடியாது! சுப்ரீம் கோர்ட் மறுப்பு MD, MS ஆகிய மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் 23ல் நடத்தப்படுவதாக இருந்தது. இளநிலை நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமானதால், நீட் முதுகலை தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது. ஆகஸ்ட் 11ல் நடக்கும் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் வெகு தொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. வெளி மாநிலங்களுக்கு சென்று எழுத வேண்டி இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், முதுகலை நீட் தேர்வு எழுதுபவர்களில் சிலர் தேர்வை ஒத்தி வைக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீட் முதுகலை தேர்வை 2 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்களுக்கான தேர்வு மையங்கள் வெகு தொலைவில் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர்களின் சிரமத்தை கருதி அருகிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்க ஏதுவாக, தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு இன்று விசாரித்தது.