உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரகசியத்தை சொல்லுங்க இல்ல ஒப்புக்கொள்ளுங்கள்: பழனிசாமி

ரகசியத்தை சொல்லுங்க இல்ல ஒப்புக்கொள்ளுங்கள்: பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கை: திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும், இன்று வரை நீட் ரகசியத்தை சொல்லவில்லை. ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி, டாக்டருக்கு படிக்கும் மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறது ஸ்டாலின் அரசு. அந்த நீட் ரகசியத்தை Daddy_Son உடனடியாக சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். இனி எந்த நீட் மரணமும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !