உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி கைது

பிளஸ் 2வுக்கு பின், எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நாடு முழுதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. தேர்வுக்கு சில நாட்கள் முன்பே, வினாத்தாள் கசிந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து NTA விசாரித்ததில், வினத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் சிகர், உத்தராகண்ட் மாநிலங்களில் வினத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வினாத் தாள் கசிவுக்கு முக்கிய காரணமாக விளங்கிய மகாராஷ்டிராவை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். #NeetExamPaperLeake #Neet #MainAccussedArrest #AVKulkarni #MBBS #BDS #BAMS #Medicine #MedicalStudies

மே 16, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natarajan Ramanathan
மே 16, 2026 13:42

22 லட்சம் மாணவர்களின் பொன்னான நேரத்தை நாசமாக்கிய இந்த பேராசிரியரை மிகவும் கடுமையான தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் போன்ற அபராதங்கள் விதிக்க வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை