நீரவ் மோடி மோசடியில் பங்கு: நெகல் மோடி யுஎஸ் சிறையில் அடைப்பு | Nehal Modi arrested in USA
குஜராத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் நீரவ் மோடி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வைர வியாபாரம் செய்து வந்தார். இவரும் இவரது உறவினர் மெஹுல் சோக்சியும் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி மோசடி செய்தனர். இதையடுத்து, நாட்டை விட்டு தப்பிய இருவரும் வெளிநாடுகளில் தலைமறைவாக வசித்தனர். இருவர் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மாேசடி மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்தினர். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி நடவடிக்கையை தொடர்ந்து மத்திய அரசின் தொடர் முயற்சியால், நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்சி பெல்ஜியத்திலும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நீரவ் மோடி செய்த பண மோசடி மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் அவரது சகோதரர் நெகல் மோடிக்கு ெ தாடர்பு இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.