உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேரு அண்ட் கோவிடம் ED அள்ளிய ஆதாரங்கள்-இனி ஆட்டமே வேற Nehru house ed raid | KN Nehru ed raid update

நேரு அண்ட் கோவிடம் ED அள்ளிய ஆதாரங்கள்-இனி ஆட்டமே வேற Nehru house ed raid | KN Nehru ed raid update

திமுக அமைச்சர் நேருவின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், நேருவின் மகனும் பெரம்பலூர் எம்பியுமான அருண் உள்ளிட்டோர் கட்டுமான மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். 2018ல் இவர்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை ரெய்டில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் திடீரென அதிரடி சோதனையில் இறங்கியது. சென்னை, கோவை, திருச்சியில் நேரு, அவரது தம்பிகள், மகன், மகள் உள்ளிட்டோர் வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. 10 முதல் 11 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. நேரு வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை வெள்ளை பெட்டியில் அமலாக்கத்துறையினர் எடுத்து சென்றனர். நேருவின் தம்பி மணிவண்ணன், சகோதரி உமா மகேஸ்வரி வீட்டிலும் ஆவணங்கள் சிக்கின. சென்னை ஆர்ஏ புரம் பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் வீட்டில் மட்டும் 2வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. இதில் கட்டுக்கட்டாக ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை ஆய்வு செய்ததில், நேரு மற்றும் அவரின் தம்பிகள், மகன் உள்ளிட்டோர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக வங்கியில் கடனாக வாங்கிய 22.48 கோடி ரூபாயை சட்டவிரோதமாக பயன்படுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரிக்க அமைச்சரின் தம்பி ரவிச்சந்திரனை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை, 3:30 மணியளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். 4 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. வங்கியில் வாங்கிய கடனை முறைகேடாக பயன்படுத்தியது பற்றி கேள்வி எழுப்பினர். ரவிச்சந்திரன் 3 போலி நிறுவனங்களை தொடங்கியதும், ட்ரூ டாம் என்ற கம்பெனியுடன் பல விதங்களில் தொடர்பில் இருந்ததையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுபற்றி அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். 4 மணி நேர விசாரணையையும் அப்படியே வீடியோ பதிவு செய்தனர்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ