குடிநீர் குழாயில் வந்த பாம்பு: மூளையை கசக்கும் அதிகாரிகள் | Nellai | Snake | Snake Pipe
தாமிரபரணி ஆற்றில் இருந்து நெல்லை மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தேவைக்காக்க குறுக்குத்துறை, கொண்டாநகரம், அரியநாயகிபுரம், மணப்படை வீடு போன்ற இடங்களில் ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மோட்டர்கள் மூலம் உறிஞ்சப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு மாநகராட்சி பகுதிகளுக்கு குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த நீரில் சாக்கடை கலந்துள்ளது, கலங்கலாக விநியோகம் செய்யப்படுகிறது என அவ்வப்போது மக்கள் குற்றம் சாட்டுவது உண்டு. புகார் வந்தால் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீரில் கூடுதலாக குளோரின் கலந்து சமாளித்து விடுவார்கள். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தச்சநல்லூர் அருகே செல்வ விக்னேஷ் நகர், மல்லிகை தெருவில் மாநகராட்சி குடிநீர் குழாயில் இருந்து பாம்பு வந்துள்ளது. அங்குள்ள ஒருவர் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு குழாயில் இருந்து பாத்திரத்தில் பாம்பு விழுந்துள்ளது.