சுருங்கி போன ஓடைகள் தொடரும் வெள்ள பாதிப்பு
திருநெல்வேலி மாநகராட்சியை ஒட்டியுள்ள, திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய்களை துார் வாராததால் மழை நீர் ஊருக்குள் புகுந்தது. திருநெல்வேலி டவுனில் கால்வாயில் வந்த மழை நீர், கல்லணை தெரு, முகமது அலி தெரு உள்ளிட்ட தெருக்களுக்குள் புகுந்தது. நயினார்குளம் நிரம்பி செல்லும் மழைநீர் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, 20 அடி அகல ஓடை வழியே தாமிரபரணி ஆற்றுக்குள் செல்லும். அப்பகுதியில் இரண்டு ஓடைகளை ஆக்கிரமித்து வணிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 20 அடி அகல ஓடை, ஆக்ரமிப்பால் 5 அடியாக சுருங்கி விட்டது.
டிச 14, 2024