உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அம்மாவும் இல்ல; அப்பாவும் இல்ல: தளராத நம்பிக்கை | Nellai Student | Tirunelveli

அம்மாவும் இல்ல; அப்பாவும் இல்ல: தளராத நம்பிக்கை | Nellai Student | Tirunelveli

அம்மா பரீட்சை எழுத போறேம்மா தாயின் உடல் முன் உருகிய மகன் திருநெல்வேலி வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. மகன் சுனில்குமார், மகள் யுவாசினி. கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சுபலட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். இவருக்கும் இதய நோய் இருந்தது. திங்களன்று அதிகாலையில் சுபலட்சுமியும் இறந்தார். சுபலட்சுமி மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். பிளஸ் டூ பொது தேர்வு தொடங்கிய நிலையில் அம்மா இறந்த சோகத்தை மனதில் தாங்கிக்கொண்டு தேர்வு எழுத சென்றார். தேர்வு எழுதிமுடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு வந்ததும் அம்மாவின் காலை தொட்டு வணங்கினார். பின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். தாயும், தந்தையும் இழந்து சுனில் குமார் வாடியதை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இவர்களுக்கு அரசு, சமூக நல அமைப்புகள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை