உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாளத்தை உலுக்கிய வீடியோ: நாடு திரும்பும் இந்தியர்கள் | Nepal| India Nepal Border Sealing |Protest

நேபாளத்தை உலுக்கிய வீடியோ: நாடு திரும்பும் இந்தியர்கள் | Nepal| India Nepal Border Sealing |Protest

ஒரு டிக்டாக் வீடியோவால் நேபாளத்தில் இரு பிரிவு மக்களிடையே பெரிய அளவில் வன்முறை வெடித்துள்ளது. அங்குள்ள தனுஷா மாவட்டம், கமலா நகராட்சியை சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி ஆகியோர் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றினர். அந்த வீடியோவில் குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இதனால் நேபாளத்தில் வெடித்தது. தொடர்ந்து அங்குள்ள மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட பதற்றம் அதிகரித்தது. குறிப்பாக, தனுஷா மற்றும் பர்சா மாவட்டங்களில் இரு பிரிவு மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, வன்முறைக்கு காரணமாக இருவரையும், பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே கமலா நகராட்சி சகுவா மாரன் என்ற பகுதியில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பிர்குஞ்ச் நகரத்தில் நிலைமை மோசம் அடைந்தது. அங்குள்ள சாலைகளில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், டயர்களை எரித்தும், சாலைகளில் தடுப்புகளை வைத்தும் போராட்டத்தில் குதித்தனர். மேலும், அங்குள்ள உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனையும் சூறையாட பதற்றம் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

ஜன 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை