/ தினமலர் டிவி
/ பொது
/ பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு... கலவரக்காடான நேபாளம் nepal gen-z protest | kp oli resigned nepal video
பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு... கலவரக்காடான நேபாளம் nepal gen-z protest | kp oli resigned nepal video
நேபாளத்தில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சோசியல் மீடியாக்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் நேபாளம் இளைஞர்கள் கொதித்துப்போனார்கள். வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். தலைநகர் காத்மாண்டில் மிகப்பெரிய போராட்டம் உருவானது. பார்லிமென்ட்டுக்குள் ஊடுருவ பார்த்தனர். ஒரு கட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்கு தீ வைக்க ஆரம்பித்தனர். கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
செப் 09, 2025