உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 19 பேரில் பைலட் மட்டும் தப்பியது எப்படி? | Nepal plane crash | Pilot escaped | Reason behind | Nepal

19 பேரில் பைலட் மட்டும் தப்பியது எப்படி? | Nepal plane crash | Pilot escaped | Reason behind | Nepal

நமது பக்கத்து நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் சர்வதேச ஏர்போர்ட் உள்ளது. இங்கிருந்து போகரா நகரத்துக்கு சவுரியா ஏர்லைன்ஸ் சிறிய ரக விமானம் 2 பைலட் உட்பட 19 பேருடன் புதனன்று புறப்பட்டது. புறப்பட்ட சில விநாடிகளில் விபத்தில் சிக்கி விமானம் தீ பிடித்ததில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் பலியாகினர். இந்த கோர விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர், கேப்டன் மனிஷ் ரத்னா ஷக்யா மட்டும் தான். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், காத்மாண்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடன் பயணித்த பைலட் உட்பட அனைவரும் தீயில் சிக்கி இறந்த நிலையில், மனிஷ் ரத்னா மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை