வீடியோவை பதிவிட்டு ராகுலை பங்கம் செய்த பாஜ prime minister modi| nepal youth want pm like modi| Nep
ேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழலுக்கு எதிராக Gen-Z ஜென்-ஸி எனப்படும் இளைய தலைமுறையினர் தலைநகர் காட்மாண்டு உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தினர். அது கலவரமாக மாறியது. 300க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிசூட்டில் 20 பேர் இறந்தனர். இதற்கு பொறுப்பேற்று, பிரதமர் ஷர்மா ஒலி, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோர் ராஜினாமா செய்தனர். போராட்டத்தை கட்டுப்படுத்த சோஷியல் மீடியாக்கள் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது. தொடர்ந்து பதட்டம் நீடித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நேபாள இளைஞர்கள் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர். ஒரு இளைஞர் கூறும்போது, பிரதமர் மோடியை போன்ற தலைவரின் ஆட்சியின் கீழ் நேபாளம் வர வேண்டும். அப்படி இருந்திருந்தால், நேபாளம் தற்போது இருக்கும் நிலையில் இருந்திருக்காது. நாடு முன்னேறி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜவின் தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா, அதன் மூலம் காங்கிரஸ் எம்பி ராகுலை விமர்சித்துள்ளார். ராகுலை இளம் தலைமுறையை போல காட்டுவதற்காக, காங்கிரஸ் கட்சி ஏராளமான பணத்தை செலவிட்டு ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறது. ராகுல் பைக் ஓட்டுவது, புஷ் அப்ஸ் எடுப்பது போன்ற வீடியோக்களை வெளியிடுகிறது. ஆனால் உண்மையில் நேபாளத்தில் உள்ள ஜென்-ஸி இளைய தலைமுறையினர் இந்தியாவில் இருப்பது போல, பிரதமர் மோடியை போன்ற தொலைநோக்கு பார்வை, உறுதிப்பாடு மற்றும் செயல்திறன் மிக்க ஒரு தலைவரை விரும்புகிறார்கள். ராகுலின் மூளையில்லாத இதுபோன்ற நாடகங்கள், இன்ஸ்டாகிராம் வித்தைகளாக இருக்கலாம். ஆனால், இளைஞர்களையும் அவர்களின் லட்சியங்களையும் ஊக்குவிப்பதில் அவை மோசமாக தோல்வி அடைகின்றன என்ற பாஜ தேசிய தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மாளவியா கூறியுள்ளார். #WeWantAPmLikeModi #NepalYouth #ModiInspiration #NepalYouthProtest #PoliticsInNepal #MotivatedYouth #NepalYouthOpinion #NepalHope #AspireForChange #ModisImpact