இஸ்ரேல் பிரதமரின் மருத்துவ அறிக்கையில் முக்கிய தகவல் | Netanyahu | Israel
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தமது உடல்நிலை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் எனக்கு இருந்த சிறிய புற்றுநோய் பாதிப்பு முற்றிலும் குணமடைந்துவிட்டது. போர் நடந்து வரும் சூழலில், தனது உடல்நிலை குறித்து ஈரான் போன்ற நாடுகள் தவறாக பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. தற்போது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். மிகச்சிறந்த உடல் தகுதியுடனும் இருக்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஏற்பட்ட வீக்கத்திற்காக எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், புரோஸ்டேட் பகுதியில் 1 சென்டிமீட்டருக்கும் குறைவான மிகச்சிறிய புள்ளி ஒன்று கண்டறியப்பட்டது. அது ஆரம்பக்கட்ட புற்றுநோய் பாதிப்பு என்பதும், அது உடலின் வேறு எந்தப் பகுதிக்கும் பரவவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. #BenjaminNetanyahu #Israel #MedicalReport #CancerSurvivor #ProstateHealth #HealthUpdate #IsraelHamasWar #MiddleEastPolitics #Netanyahu