செல்போன்களில் பேச்சு நேரலை; ஹமாஸ்க்கு நெதன்யாஹுவின் செய்தி Netanyahu at UN| diplomats walk out
நியூயார்க்கில் நடைபெற்று ஐநா பொது சபையில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, காஸாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என்று அறிவித்தார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காஸாவில் எங்கள் வேலையை முடிப்போம் என்றார். பாலஸ்தீனத்தை தனி நாடாக சில நாடுகள் அங்கீகரித்தை சுட்டிக்காட்டிய நெதன்யாஹு, அவமானமான இந்த முடிவு, யூதர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனைத்து இடங்களிலும் ஊக்குவிக்கும் எனக்கூறினார். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு, சரணடைய வேண்டும்; இஸ்ரேலிய பணைய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் நெதன்யாஹு வலியுறுத்தினார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு உத்தரவுப்படி, ஐநா சபையில் அவர் ஆற்றிய உரை நேரலையாக, காஸா முழுவதும் ஸ்பீக்கர்கள் வைத்து ஒலிபரப்பப்பட்டன. காஸா பிராந்தியத்தில் உள்ள மொபைல் போன்களை இஸ்ரேல் ராணுவம் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, நெதன்யாஹுவின் பேச்சை நேரடியாக ஒலிபரப்பின. அக்டோபர் 7 ல் இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல் பற்றிய தகவல்களுடன் இணைக்கும் QR கோடு அடங்கிய பேட்ஜை நெதன்யாஹு அணிந்திருந்தார். முன்னதாக, நெதன்யாஹு பேச மேடை ஏறும்போதே, சபையில் இருந்த அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பெரும்பாலான பிரதிநிதிகள் கொத்து கொத்தாக எழுந்து வெளிநடப்பு செய்தனர். ஆப்பிரிக்கா ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் அவர்களுடன் எழுந்து சென்றனர். பாலஸ்தீன இனப்படுகொலை மற்றும் நெதன்யாஹுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் முன்கூட்டியே பேசிவைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் இருந்தனர். காஸா மீதான போரால் உலக அரங்கில் இஸ்ரேல் எந்தளவுக்கு தனிப்படுத்தப்பட்டு உள்ளது என்பது இதன் மூலம் வெளிப்பட்டது. முன்னதாக ஐநா பொது சபையில் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன. #Netanyahu #UNSpeech #DiplomatsWalkOut #EmptyChairs #UnitedNations #MiddleEast #InternationalRelations #GazaPalastine #PalastineCrises