ஹமாஸ் இயக்கத்தை நிராயுதபாணி ஆக்காமல் விடமாட்டோம் Benjamin netanyahu| Gaza war| Hamas| trump
அமெக்க அதிபர் டிரம்ப் முன்மொழித்த அமைதி திட்டத்தின்படி, இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இச்சூழலில், காஸாவில் போர் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஷு தெரிவித்து இருக்கிறார். 2ம் கட்ட போர் நிறுத்தம் முடிந்த பின்னரே, காஸாவில் போர் முடிவுக்கு வரும். ஹமாஸ் இயக்கத்தினரிடம் இருந்து ஆயுங்களை பறித்து அவர்களை நிராயுதபாணி ஆக்குவதும், காஸா பிராந்தியத்தை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் 2ம் கட்ட போர் நிறுத்தத்தில் அடங்கும். அது வெற்றிகரமாக முடியவேண்டும். எளிதான வழியில் அது முடியும் என்று நம்புகிறோம். அது நடக்கவில்லை என்றால், கடுமையான வழியில் தான் போர் முடிவுக்கு வரும் என்று நெதன்யாஷு கூறியுள்ளார். கடினமான வழி என்று அவர் குறிப்பிட்டது, காஸா மீது மீண்டும் போர் தொடரும் என்பதை சொல்லியிருக்கிறார். போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் தரப்பில் இதுவரை 2000 பாலஸ்தீன கைதிகளையும், 135 பேரின் உடல்களையும் ஒப்படைத்துள்ளது. ஹமாஸ் இதுவரை உயிருடன் 20 பணயக்கைதிகளையும், 10 பேரின் உடல்களையும் ஒப்படைத்து இருக்கிறது. இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும். அதை பொறுத்தே காஸா-எகிப்து இடையே உள்ள ரஃபா எல்லையை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இறந்த அனைத்து பணயக்கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் திருப்பி தராவிட்டால், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கம் என்று அதிபர் டெனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.