IPC, CRPC சட்டங்கள் இனி இல்லை! | New Criminal Laws | Online FIR | New Laws
ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி. எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி. என்ற குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி. என்ற இந்திய சாட்சிய சட்டங்கள் 150 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இன்றைய காலத்துக்கு ஏற்ப இதில் புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைகள் இருந்தது. மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு 2014ல் பொறுப்பேற்ற பின் குற்றவியல் சட்டங்களை மாற்ற முடிவு செய்தது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம் என மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்ட இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஜூலை 01, 2024