சாலையில் இடையூறு: டில்லி போலீஸ் ஆக்ஷன் | New criminal laws | 1st case filed | Delhi street vendor
நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு புதிய சட்டங்களை அறிமுகம் செய்தது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. சமுதாயத்தில் தினம் தினம் அதிகரிக்கும் புதிய வகை குற்றங்களை சமாளிக்கவும், விரைவாக நீதி கிடைக்கும் வகையிலும் பல மாற்றங்களுடன் குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. அதாவது கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோர்ட்டில் முதல் விசாரணை முடிந்த 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.