/ தினமலர் டிவி
/ பொது
/ நெரிசலில் சிக்கி பலர் இறந்ததால் ரயில்வே நடவடிக்கை New Delhi - Prayagraj Special Trains Announced| Pr
நெரிசலில் சிக்கி பலர் இறந்ததால் ரயில்வே நடவடிக்கை New Delhi - Prayagraj Special Trains Announced| Pr
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. சாஹி ஸ்நான் எனப்படும் முக்கிய புனித நீராடல்கள் நிறைடைந்தபோதும், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனவே, டில்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இதில் பயணிப்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் இறந்தனர். எனினும், உபி நோக்கி செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க, கும்பமேளா முடியும் வரை டில்லியில் இருந்து புதிதாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்தது.
பிப் 16, 2025