ஓப்போ ரெனோ 15 5ஜி சீரிஸ்! என்னென்ன ஸ்பெஷல் இருக்கு | New Phone | Phone Launch | Oppo Reno
லையன்ஸ் டிஜிட்டல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஓப்போ ரெனோ 15, 15 ப்ரோ , 15 ப்ரோ மினி என 3 மாடல்கள் அறிமுகமாகி உள்ளன. சென்னையில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமில் நடிகை மிர்னாளினி ரவி இதை அறிமுகப்படுத்தி வைத்தார். ரெனோ 15 ப்ரோ மாடல்கள் அனைத்தும் ஃபாஸ்ட்-சார்ஜிங் பேட்டரியை கொண்டிருக்கும். 200MP கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, AI கூலிங் சிஸ்டம் 6,500mAh பேட்டரி இந்த போனில் இருக்கும் முக்கிய அம்சம். ₹45,999 என்ற ஆரம்ப விலையில் இந்த ஓப்போ ரெனோ 15 5ஜி சீரிஸ் கிடைக்கிறது. அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ், அஜ்மல் பிஸ்மி, ஜியோ மார்ட் டிஜிட்டல் மற்றும் www.reliancedigital.in வெப்சைட்டில் இந்த போன் கிடைக்கும்.