உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமண வீட்டை துக்க வீடாக மாற்றிய விமான விபத்து! Newly married women|Lost her husban|Flight Crash

திருமண வீட்டை துக்க வீடாக மாற்றிய விமான விபத்து! Newly married women|Lost her husban|Flight Crash

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் பாவிக். 26 வயதாகும் இவர், லண்டனில் படிப்பை முடித்து அங்கேயே பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், உறவுக்கார பெண் ஈஷாவுடன், பாவிக்கிற்கு திருமணம் செய்வதாக இரு வீட்டார் பேசி முடித்தனர். 15 நாள் விடுமுறையில் லண்டனில் இருந்து குஜராத் வந்தார் பாவிக். நண்பர்கள் உறவினர்களுடன் சந்தோஷமாக ஊர் சுற்றினார். 12ம் தேதி லண்டன் செல்ல அவர் டிக்கெட் புக் செய்திருந்தார். ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும் போது, திருமணத்தை தள்ளிப் போடுவதாக பாவிக்கிடம் பெற்றோர்கள் செல்லமாக கோபித்து கொண்டனர். இம்முறை திருமணம் முடித்துத் தான் லண்டன் செல்ல வேண்டும் என அன்புக் கட்டளையிட்டனர். பெற்றோரின் பேச்சுக்கு கட்டுப்பட்ட பாவிக் திருமணத்துக்கு சம்மதித்தார். மகிழ்ச்சி அடைந்த பெற்றோர், ஈஷாவின் பெற்றோரை கலந்து பேசி, நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து, 10ம் தேதி பதிவுத் திருமணத்தை முடித்தனர்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ