ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது ED
தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளி விற்க குவாரிகள் நடத்த அனுமதி அளிப்பது நீர்வளத்துறை. அந்த துறையின் அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். மணல் குவாரி ஒப்பந்தபணிகளை புதுக்கோட்டை எஸ் ராமச்சந்திரன் கவனித்து வந்தார். அவரது உறவினரும் திண்டுக்கல் தொழிலதிபருமான ரத்தினம், புதுக்கோட்டை கரிகாலன் ஆகியோர் குவாரிகளில் இருந்து மணல் அள்ளி, மாநிலம் முழுவதும் விற்கும் அரசு அரசு ஒப்பந்ததாரர்களாக செயல்பட்டு வந்தனர். இந்த மூவரும் அதிகார மையங்களுடன் நேரடி தொடர்பு இருந்ததால், மணல் எடுப்பதில் விதிகளை மீறினாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என நீண்டகாலமாக புகார்கள் கூறப்பட்டன.
ஜூன் 28, 2024