/ தினமலர் டிவி
/ பொது
/ மண் சரிவில் சிக்கிய கார் 3 பேர் பத்திரமாக மீட்பு ooty rain| nilgiri rain | pandalur flood
மண் சரிவில் சிக்கிய கார் 3 பேர் பத்திரமாக மீட்பு ooty rain| nilgiri rain | pandalur flood
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் வீடுகள், விவசாயத் தோட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. வீடுகளுக்குள் தண்ணீர் சென்றதால் பொருட்கள் அனைத்தும் சேதமானது. அங்கிருந்த மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சாலையை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டனர். கூடலூர் செல்லும் சாலையில் அத்திமாநகர் என்ற இடத்தில், மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
ஜூன் 29, 2024