பயிற்சியின்போது 5 வீரர்களுக்கு நேர்ந்த சோக முடிவு
லடாக்கில் T-72 ராணுவ வீரர்கள் சென்ற பீரங்கி வாகனம் ஆற்றை கடக்க முயன்றது. அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீரங்கி வாகனம் அடித்து செல்லப்பட்டது. அதில் பயணித்த 5 வீரர்கள் மரணம் அடைந்தனர். கிழக்கு லடாக்கின் சசர் ப்ராங்சாவுக்கு (Saser Brangsa) அருகில் உள்ள ஷியோக் (Shyok) ஆற்றில், 5 ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. மரணமடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்தார். ரஷ்ய தயாரிப்பான T-72 ரக பீரங்கி விபத்து குறித்து ராணுவ விசாரணை தொடங்கி உள்ளது.
ஜூன் 29, 2024