ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்! police | shot and caught | rowdy |
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சத்யா என்ற சீர்காழி சத்யா. வயது 41. அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் போலீசாரின் சந்தேக வளையத்தில் இருக்கும் ரவுடி. இது தவிர சத்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சென்னை, பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் சுதாகர் என்பவரின் பிறந்த நாள் விழாவுக்காக, ரவுடி சத்யா கூட்டாளி இருவருடன் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் வந்தார்.
ஜூன் 29, 2024