மெரினா பீச் கடைகளில் பானிபூரி மாதிரிகள் சேகரிப்பு
மெரினா பீச் கடைகளில் பானிபூரி மாதிரிகள் சேகரிப்பு கர்நாடகாவில் சாலையோரங்களில் விற்கப்படும் பானிபூரி தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதித்தனர். பானிபூரிக்கான மசாலா நீரில் சேர்க்கப்படும் டைDye வகையை சேர்ந்த ஆப்பிள் கிரீன் நிறமியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திலும் பானிபூரி கடைகளில் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டது. மாநிலத்தின் பல இடங்களில் நேற்று சோதனை நடந்தது. சென்னை மெரினா பீச் பானிபூரி கடைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டன.
ஜூலை 03, 2024