திமுகவினரின் சொத்துகளை கையகப்படுத்த ஸ்டாலின் விடுவாரா? Mk stalin | Annamalai | Metro rail | CMRL
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: சென்னை ராயப்பேட்டையில், மெட்ரோ ரயில் பணிக்காக, சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கையம்மன் கோயில் ராஜகோபுரம் மற்றும் ரத்தின விநாயகர் கோயிலை இடிக்க, இந்து மத விரோத திமுக அரசு முடிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவினரின் சொத்துகள் இருக்கும் இடங்களை அரசு பணிகளுக்காக கையகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அனுமதிப்பாரா? அறிவாலயத்துக்குள் அமைந்திருக்கும் திறந்த வெளி நிலத்தை, பூங்காவாக பராமரிக்கிறோம் என கூறினார்கள். ஆனால், அங்கு சிலைகள் வைத்ததையும், வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வந்ததையும், அந்த இடத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் திமுக தாமதப்படுத்தியதையும் மக்கள் மறக்கவில்லை.