ஆற்காடு சுரேஷ் பிறந்த நாளில் போட்ட ஸ்கெட்ச்-பகீர் தகவல் | Arcot Suresh vs Armstrong
ஆற்காடு சுரேஷ் பிறந்த நாளில் போட்ட ஸ்கெட்ச்-பகீர் தகவல் | Arcot Suresh vs Armstrong | BSP Armstrong பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு 7 மணி அளவில் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை மொத்த சென்னையையும் அதிர வைத்துள்ளது. 8 பேரை கைது செய்த போலீஸ், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. போலீசில் சிக்கியவர்களில் முக்கிய நபர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பென்னை பாலு. அவர் தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அண்ணன் கொலைக்கு பழிவாங்க அவரது பிறந்த நாளிலேயே திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் கூறியது: ஆற்காடு சுரேஷ் மிகப்பெரிய ரவுடி. பல முக்கிய பிரமுகர்கள் கொலையில் தொடர்புள்ளவர். 30க்கும் மேற்பட்ட வழக்கு இருந்தது. 8 முறை குண்டாசில் கைதாகி இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி பட்டினம்பாக்கத்தில் வைத்து ஆற்காடு சுரேசை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலைக்கு ரிவேஞ்ச் எடுக்க ஆற்காடு சுரேஷ் தம்பி பாலு முடிவு செய்தார். கொலையில் ஆம்ஸ்ட்ராங்குக்கும் முக்கிய பங்கு உண்டு என்று பாலு தீர்க்கமாக நம்பினார். பின்னால் இருந்து அவர் தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தார் என்றும், அரசியல் பின்புலம் இருப்பதால், அவர் பெயரை போலீசார் வழக்கில் சேர்க்கவில்லை என்றும் பாலு கருதினார். இதனால் ஆம்ஸ்ட்ராங்கை போட்டுத்தள்ள முடிவு செய்தார். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் தரப்பில் இருந்து பாலுவுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயத்தில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதுவும் பாலுவுக்கு நெருக்கடியை உண்டு பண்ணியது. ஆம்ஸ்ட்ராங் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று பாலு முடிவு செய்தார். அடுத்த மாதம் ஆகஸ்ட் 18ம் தேதி ஆற்காடு சுரேசின் நினைவு நாள் அதற்கு முன்பு சம்பவம் செய்து விட வேண்டும் என்று நினைத்தார். அல்லது, ஜூலை 5ம் தேதி ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள். அந்த நாள் ஆம்ஸ்ட்ராங் இறந்த நாள் ஆக வேண்டும் என்று கணக்கு போட்டார். இதற்காக தீவிரமாக சதி திட்டத்தில் இறங்கினார். தனது ஆதரவாளர்கள் மற்றும் சிறையில் இருந்தவர்களின் உதவியுடன் வேவு பார்த்தார். அண்ணன் ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளான நேற்று ஆம்ஸ்ட்ராங்குக்கு தேதி குறித்தார். அதன்படி பெரம்பூரில் வைத்து அவரை தீர்த்துக்கட்டினர் என்று போலீசார் கூறினர்.