உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக கூட்டணிக்கு மதிமுக முழுக்கு? | DMK | DMDK | MKStalin | Vaiko | Durai Vaiko

திமுக கூட்டணிக்கு மதிமுக முழுக்கு? | DMK | DMDK | MKStalin | Vaiko | Durai Vaiko

திமுக கூட்டணிக்கு மதிமுக முழுக்கு? | DMK | DMDK | MKStalin | Vaiko | Durai Vaiko மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்தது. பங்கேற்கும் கட்சி தலைவர்களின் பெயர்களும் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிடப்பட்டன. அதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, அவரது மகன் துரை பெயர்கள் இடம் பெறவில்லை. மதிமுக தலைமை அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு கூட மதிமுக சார்பில் யாருமே வரவில்லை. மதிமுக நிர்வாகிகள் கூறுகையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்குப் பின் திமுக எங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்துக்கு எங்களை திமுக தலைமை அழைக்கவில்லை. அழைக்காத இடத்துக்கு எப்படி செல்வது? அதனால் நாங்கள் புறக்கணித்து விட்டோம். மதிமுக தலைவர்கள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள் அணியினரும் புறக்கணித்து விட்டனர். மற்றபடி கூட்டணிக்கு முழுக்கு போடும் அளவுக்கு, இப்போதைக்கு பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை என்றனர். இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: வைகோ, துரை ஆகிய இருவரும் உண்ணாவிரத போராட்டம் நடந்த அன்று சென்னையில் தான் இருந்தனர். கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரை அனுப்பி வைக்க விரும்புவதாக திமுக தரப்புக்கு சொல்லி அனுப்பினர். மாநில நிர்வாகி பெயரையும் அழைப்பிதழில் போட திமுக மறுத்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்றே அடித்துச் சொல்வேன் என மதுரையில் துரை அளித்த பேட்டியில் கூறினார். இதை திமுக தரப்பு ரசிக்கவில்லை. காரணம் அது அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக நினைக்கின்றனர். கூட்டணியை விட்டு செல்ல மதிமுக முடிவெடுத்து விட்டதோ என திமுகவும், தங்களை திட்டமிட்டே கூட்டணியை விட்டு வெளியே அனுப்ப திமுக முயற்சிக்கிறதோ என மதிமுகவும் நினைக்கின்றன. ஒருவேளை திமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறினால், அக்கட்சியை தங்கள் பக்கம் இழுத்து கொள்ள அதிமுக தரப்பில் முயற்சி நடப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை