/ தினமலர் டிவி
/ பொது
/ ஜம்மு காஷ்மீரை அலறவிட்ட பதுங்கு குழி | terrorist bunker | J&K's Kulgam | Indian Army
ஜம்மு காஷ்மீரை அலறவிட்ட பதுங்கு குழி | terrorist bunker | J&K's Kulgam | Indian Army
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முடர்கம், சானிகம் ஆகிய கிராமங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். முடர்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சோக நிகழ்வாக ராணுவ வீரர் பிரதீப் இறந்தார். சானிகம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். ராணுவ வீரர் ராஜ் குமார் இறந்தார்.
ஜூலை 08, 2024