உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 34 காவலர்கள் | Transfer of police | PEW to PS | Kallakurichi

காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 34 காவலர்கள் | Transfer of police | PEW to PS | Kallakurichi

காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 34 காவலர்கள் | Transfer of police | PEW to PS | Kallakurichi | Ulundurpet | Thirukoilur கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் ஜூன் 18 அன்று, கள்ளச்சாராயம் குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதித்து ஆஸ்பிடல்களில் சேர்க்கப்பட்டனர். அரசு, தனியார் ஆஸ்பிடல்களில் சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 65 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி போலீசர் விசாரிக்கின்றனர். கள்ளச்சாராயம் விற்றதாக கைதான சின்னதுரை, ராமர், ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 23 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்த 34 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் தாலுக்கா அமலாக்கப் பிரிவில் ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த 34 பேர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 3 தாலுக்கா காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 39 ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள்கள் அமலாக்க பிரிவுக்கு வந்துள்ளனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் திருநாவலூர் காவல் நிலையத்துக்கும், கள்ளக்குறிச்சி அமலாக்க பிரிவில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மணலூர்பேட் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கள்ளக்குறிச்சி அமலாக்க பிரிவுக்கும், உளுந்தூர்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பிரபாவதி உளுந்தூர்பேட்டை பிரிவுக்கும், கச்சிராபாளையம் சப்இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருக்கோவிலூர் அமலாக்க பிரிவுக்கும் மாற்றி மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். அனைவரும் உடனடியாக புதிய இடத்தில் பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை