உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யாவில் மோடி சாதித்த மிகப்பெரிய விஷயம் | Modi-Putin meet | Russia vs Ukrain | Modi Russsia tour

ரஷ்யாவில் மோடி சாதித்த மிகப்பெரிய விஷயம் | Modi-Putin meet | Russia vs Ukrain | Modi Russsia tour

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் நெருக்கம் காட்டினாலும் தனது நீண்ட கால நண்பனான ரஷ்ய உறவை விட்டு கொடுக்க முடியாது என்பதை மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது. அப்படி தான் மோடி, புடின் சந்திப்பு இருந்தது. உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உலக நாடுகள் இந்த சந்திப்பை உற்று நோக்கின. அமெரிக்காவுக்கு மோடி-புடின் சந்திப்பு எரிச்சலை உண்டு பண்ணியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஆத்திரப்பட்டு பேசினார். உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர், உலகின் பெரிய கிரிமினலை கட்டிப்பிடிப்பது கவலையளிப்பதாக சொன்னார். ஆனால் எல்லா விமர்சனங்களையும் மோடி தூள் தூளாக்கினார். உக்ரைன் விவகாரம் பற்றி தான் புடினிடம் நிறைய பேசினார் மோடி.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !